திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள், முறையான குடிநீர், கழிவறை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் அலுவலகத்தில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் பல லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கழிப்பறை ஆகியவை போதிய பராமரிப்பின்றி குப்பை கழிவுகளால் மூடப்பட்டுள்ளது.அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது.இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.