சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தின் பின்புறம் போதிய பராமரிப்பின்றி எலும்புக் கூடு போல் காட்சியளிக்கிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் முன்புறம் மட்டும் பராமரிகப்பட்டு பின் புறம் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு வருபவர்களும் பாழடைந்த கட்டடத்தை கண்டு அஞ்சுகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் கட்டடம் சேதமடைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.