அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் நிதி நிறுவனம் அளித்த தொந்தரவால் தேமுதிக மாவட்ட நிர்வாகி ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார். கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் வாங்கிய கடனை கட்டாத நிலையில், நிதி நிறுவனத்தின் தொந்தரவால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.