திமுக கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதாக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக கூட்டணியில் நிலவும் அதிருப்தி எப்பொழுது வெடிக்கும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்றார். மேலும், போதைப்பொருள் புழக்கத்தை தமிழகத்தில் கட்டுப்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.