வேலூர் மாவட்டத்தில் வாரச்சந்தையை ஏலம் எடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழக ஆந்திரா எல்லை பகுதியான பரதராமி கிராமத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சந்தை ஏலம் விடும் நிகழ்வின் போது வியாபாரிகள், திடீரென வாக்குவாதம் செய்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.