மனைவியுடன் ஏற்பட்ட தகராறு, சாலையில் விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் குடும்ப தகராறு காரணமாக, மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். பாரதி - ஸ்வேதா என்ற தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேலைக்கு சென்று கொண்டிருந்த ஸ்வேதாவை, பாரதி வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற பாரதியை அப்பகுதி மக்கள் பிடித்து கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.