திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சொத்து பிரச்சனை காரணமாக மருமகளின் கழுத்தில் சின்ன மாமனார் கத்தியை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் கோவிந்தசாமி மற்றும் சௌந்தர். இவர்களுக்கு சொந்தமான சொத்தை இதுவரை பிரித்து கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் பொதுவாக உள்ள இடத்தில் பைப் லைன் அமைக்க வேண்டும் என கோவிந்தராஜனின் மகனான திருமாலிடம், சௌந்தர் கேட்ட போது எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டது.