நெல்லையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், தாய் மற்றும் மகன் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலில், சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்தார். சிஎன் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால், ஆத்திரம் அடைந்த காளிமுத்து, கண்ணன் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. அப்போது தாக்குதலை தடுக்க சென்ற கண்ணனின் தாய் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து காளிமுத்து மற்றும் அவரது சகோதரர் ஆனந்த ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.