பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்பதை போல, மாமனுக்கும் மச்சானுக்கும் நிகழ்ந்த தகராறு, விபரீதத்தில் முடிந்துள்ளது. அக்காவின் கணவருடன் மோதலில் ஈடுபட்ட இளைஞர், இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட அவலம், இளைஞரின் தலையை குறிவைத்து பட்டாக் கத்தியால் வெட்டிய கொடூரம், தடுக்க வந்த மற்றொரு நபருக்கும் விழுந்த வெட்டு, பட்டாக் கத்தியால் வெட்டிக் கொள்ளும் அளவுக்கு மாமனுக்கும், மச்சானுக்கும் இடையே அப்படி என்ன பிரச்னை? பின்னணி என்ன?இரவு நேரம். ஏழரைப்பட்டி கிராம மக்கள் எல்லாரும் தங்களோட வீட்ல படுத்து தூங்கிட்டு இருந்துருக்காங்க. அப்ப, திடீர்ன்னு சில பெண்களோட அலறல் சத்தம் கேட்டிருக்கு. சத்தத்த கேட்ட கிராம மக்கள் உடனே சாலைக்கு ஓடி வந்து பாத்துருக்காங்க. அங்க பீட்டர்-ங்குற நபரு தலையில வெட்டுக்காயங்களோட ரத்த வெள்ளத்துல உயிருக்கு போராடிட்டு இருந்தாரு. அவருக்கு பக்கத்துல கார்த்திக்கும், குபேந்திரன்-ங்கிற இளைஞரும் லேசான காயங்களோட நடுரேட்டுல உட்காந்துட்டு இருந்தாங்க. இத பார்த்த உடனே ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் பண்ணி வரவச்ச கிராம மக்கள் உயிருக்கு போராடிட்டு இருந்த பீட்டரையும், லேசான காயங்களுடன் இருந்த கார்த்திக், குபேந்திரனையும் மீட்டு, ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஹாஸ்பிட்டலுக்கு போன போலீஸ், அங்க சிகிச்சையில இருந்த பீட்டர் கிட்ட தீவிர விசாரணையில இறங்குனாங்க. அதுல தான் மோதலுக்கான முக்கிய காரணமே தெரிய வந்துச்சு.திருப்பத்தூர்ல உள்ள நாட்றம்பள்ளிய அடுத்த ஏழரைப்பட்டிய சேந்த சக்தி என்பவரோட மகன் குபேந்திரன், மேளம் அடிச்சு அது மூலமா கிடைக்குற பணத்த வச்சு வாழ்ந்துட்டு இருந்துருக்காரு. இவங்க குடும்பமும் அதே பகுதிய சேந்த குமாரு-ங்குற நபரோட குடும்பமும் ஆரம்ப காலகட்டத்துல நல்ல க்ளோஸ் பிரண்ட்ஸா தான் இருந்துருக்காங்க. குமாருக்கு ரெண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்காங்க. கூலி வேல செஞ்சிட்டு குடும்பத்தோட வாழ்வாதாரத்த கவனிச்சுட்டு இருந்துருக்காரு குமார். ஒரே ஏரியா-ங்குறதால ரெண்டு குடும்பத்துக்காரங்களும் பாக்குற இடத்துல பேசிக்கிறது, ஒருத்தர் இன்னொருதரோட வீட்டுக்கு போறதுன்னு ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்ஸா இருந்துருக்காங்க. இதுக்கிடையில குபேந்திரனுக்கும் - குமாரோட பொண்ணு கீர்த்திகாவுக்கும் காதல் ஏற்பட்டிருக்கு.ஆனா, அடுத்த கொஞ்ச நாட்கள்லயே இவங்களோட காதல் விவகாரம், கீர்த்திகாவோட அப்பா குமாருக்கு தெரிய வந்துருக்கு. இதனால கடும் கோபமான கீர்த்திகாவோட உறவுக்காரங்க, குபேந்திரன் மேல ஆத்திரத்துல இருந்துருக்காங்க. ரெண்டு பேரும் ஒரே சமூகமா இருந்தாலும், இவங்களோட காதலுக்கு ரெண்டு பேரோட வீட்ல இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பிருக்கு. குபேந்திரன் ஒரு நல்ல வேலையில இல்லாததால கீர்த்திகாவோட வீட்ல பயங்கர எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க.குபேந்திரனுக்கு ஒரு நிலையான வேலை இல்ல, மேளம் அடிச்சு அதுமூலமா அவன் சம்பாதிக்குற பணத்த வச்சு வாழ்க்கைய நடத்த முடியாது, நீ அவன கல்யாணம் பண்ணிக்கிட்டனா உன்னோட வாழ்க்கையே கேள்விக்குறியாகிடும், நீ அவன மறந்துரு, நாங்க வேற ஒரு நல்ல பையனா பாத்து உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறோம்ன்னு அட்வைஸ் பண்ணிருக்காங்க. ஆனா, அத காது கொடுத்துக்கூட கேட்காத, கீர்த்திகா தொடர்ந்து குபேந்திரன காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. ரெண்டு பேரு வீட்லையும் தீவிர எதிர்ப்பு இருந்ததால வீட்ட விட்டு வெளியேறுன காதல் ஜோடி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு கோபமான கீர்த்திகாவோட குடும்பத்தினர், குபேந்திரனோட வீட்டுக்கு போய்ட்டு அடிக்கடி சண்டை போட்ருக்காங்க. அதே மாதிரி கீர்த்திகாவோட தம்பி பீட்டரும், குபேந்திரன் கிட்ட தொடர்ந்து பிரச்னை பண்ணிட்டு இருந்துருக்காரு.இதனால ரெண்டு குடும்பத்துக்குள்ளையும் அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. அதுமட்டும் இல்லாம பீட்டர், குபேந்திரனோட தங்கச்சிய காதலிச்சுட்டு இருந்ததா சொல்லப்படுது. சம்பவத்தன்னைக்கு சாயங்காலம் பீட்டரும், அவரோட தங்கச்சியும் தனியா நின்னு பேசிட்டு இருந்துருக்காங்க. இதபாத்த குபேந்திரனோட நண்பர்கள், இந்த விஷயத்த குபேந்திரன் கிட்ட சொல்லிருக்காங்க. அதுமட்டும் இல்லாம அன்னைக்கு நைட்டே குபேந்திரனோட தங்கச்சிய பாக்க, பீட்டர் அவங்க வீட்டுக் கிட்ட போய்ருக்காரு. அப்ப வீட்டு வாசல்ல நின்னுட்டு இருந்த குபேந்திரனோட தங்கச்சிய, பீட்டர் கண்ணெடுக்காம பாத்துட்டு இருந்ததா கூறப்படுது. இத பாத்து கோபத்தோட உச்சத்துக்கே போன குபேந்திரன், உனக்கு என்ன தைரியம் இருந்தா, என்னோட தங்கச்சிய சைட் அடிப்பன்னு கேட்டு பீட்டர சரமாரியா அடிச்சுருக்காரு.பதிலுக்கு பீட்டரும் குபேந்திரன தாக்க ரெண்டு பேரும் கட்டிப் புரண்டு சண்டை போட்ருக்காங்க. இதபாத்த கிராம மக்களும் பீட்டரோட அண்ணன் கார்த்திக்கும், ரெண்டு பேரையும் தடுத்து சமாதானம் பேசி அனுப்பி விட்டுருக்காங்க. ஆனா, கொலை வெறியோட வீட்டுக்கு போன குபேந்திரன் வீட்ல இருந்த பட்டாக்கத்திய எடுத்துட்டு வந்து, பீட்டரையும், அவங்க அண்ணனையும் சரமாரியா வெட்டிருக்கான். பதிலுக்கு அவங்களும் தாக்குனதுல குபேந்திரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டிருக்கு. இதபாத்த கிராம மக்கள் மூணு பேரையும் மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சுருக்காங்க... இதுல தீவிர சிகிச்சை பிரிவுல அனுமதிக்கப்பட்டிருந்த பீட்டருக்கு தலையில 25 தையல் போட்டுருக்குறதா டாக்டர் தரப்புல சொல்லிருக்காங்க. இந்த தகவல கேட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், தீர விசாரணை பண்ணி மூணு பேரும் ஹாஸ்பிட்டல்ல இருந்த டிஸ்சார்ஜ் ஆனதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும்ன்னு உறுதி அளிச்சுருக்காங்க...