தூத்துக்குடியில் மருமகன் கட்டையால் அடித்ததால் படுகாயமடைந்த மாமனார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாமனார் தாக்கியதில் கால் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த மருமகன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 15 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து, மதுவுக்கு அடிமையாகி சாலை ஓரங்களில் வசித்து வந்த ஆசீர்வாதம் என்பவர், அரசு மதுபானக் கடைக்கு மது அருந்த சென்ற போது, அங்கே ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்த அவரது மருமகன் அஜயுடன் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.