திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் தோல் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் பாலாற்றில் நேரடியாக கலப்பதால் தண்ணீர் மாசடைந்து, நுரை பொங்கியபடி வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் சட்ட விரோதமாக தோல் ஆலைகளில் இருந்து திறந்து விடப்படும் கழிவு நீர் ஆற்றில் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு ஆற்று தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் பலனில்லை என தெரிவிக்கின்றனர்.