திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் குடகனாறு அணைக்கட்டில், தீயணைப்புத் துறை சார்பில் பேரிடர் மீட்பு செயல்முறை பயிற்சி நடைபெற்றது. பருவமழை முன்னெச்சரிக்கையாக, மழைகாலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிலிருந்து, பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி, எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றி கரை சேர்ப்பது, கயிறு மூலம் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு மக்களை எப்படி மீட்பது போன்றவை குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.