மீன் வளம் மற்றும் தீயணைப்புத்துறை சார்பில், மீனவர்களுக்கு பேரிடர் கால மீட்புக்கான, ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த ஆர்.புதுப்பட்டினம் மீனவ கிராமத்தில், மீனவர்களுக்கான பேரிடர் கால மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.ஆவுடையார் கோவில் தாலுகா, ஆர்.புதுப்பட்டினம் புயல் பாதுகாப்பு மைய கட்டிடத்தில், மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை செய்து காண்பித்தனர். பேரிடர் காலங்களில், கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது, நெரிசலில் மாட்டிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்டு அவர்களுக்கு முதல் உதவி அளிப்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது.