தன்னை காதல் திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு, 12ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாற்றுத்திறனாளி மனைவி ஒரு மாத கைக்குழந்தையுடன் வந்து சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான ஜோதி, தாதகாபட்டியை சேர்ந்த சிவானந்தம் என்பவரை காதலித்து ஓராண்டுக்கு முன் திருமணம் செய்த நிலையில், சிவானந்தம் மாணவியை திருமணம் செய்தது, அவருடன் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் கிடைத்துள்ளதாக கண்ணீர்மல்க தெரிவித்தார்.