சிவகங்கை மாவட்டத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டிகளில், ஏராளமானோர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. மாற்று திறனாளி மாணவ,மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். நூறு மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கபடி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.