குளித்தலை வட்டாட்சியர் உள்ளிட்டோரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கே.உடையாபட்டி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முத்துசாமி, தனக்கு சொந்தமான நிலப்பட்டாவில் சம்பந்தமில்லாத நபரின் பெயர் இருப்பதாகவும், அதனை நீக்கக் கோரி புகார் அளித்து 6 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.