வேட்டுவம் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், நேரில் ஆஜரான இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கி கீழ்வேளூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 13ஆம் தேதி நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார். இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது, அலட்சியமாக செயல்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்தியது உட்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் ஆஜாரான இயக்குநர் பா. ரஞ்சித், பிணையில் விடுவிக்கப்பட்டார்.