சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள், விசிக நிர்வாகியின் செல்போனை பிடுங்கி கொண்டு மிரட்டும் தொனியில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. விசிக நிர்வாகி இளையராஜா என்பவர் கோவில் வளாகத்தில் வீடியோ எடுத்ததாக கூறி, அவரது செல்போனை பறித்து கொண்ட தீட்சிதர்கள், செல்போனை தர முடியாது என மிரட்டி உள்ளனர்.