தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 6 மாதம் மட்டுமே வாழை நார்கள் பிரித்தெடுக்கும் பணிகள் நடைபெறுவதால் அரசு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கபிஸ்தலம், அய்யம்பேட்டை, வீரமாங்குடி, கணபதி அக்ரஹாரம் பகுதிகளில் வாழை மரங்களிலிருந்து வாழை நார்கள் பிரித்தெடுத்து சென்னை, பெங்களூர், குஜராத் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மழை பெய்தால் நார்களை காய வைப்பது சிரமம் ஏற்படுவதால், 6 மாதம் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வருவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.