தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன், கூட்டணி குறித்து பேசவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி குறித்த முடிவுகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று கூறினார். மேலும், பிரேமலதா தாயாரின் மறைவு குறித்து நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக ஆர்பி உதயகுமார் விளக்கம் அளித்தார். முன்னதாக, மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரேமலதாவை, ஆர்பி உதயகுமார் நேரில் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் பாருங்கள் - பிரேமலதாவுடன் பேசியது என்ன? ஆர்.பி.உதயகுமார் விளக்கம் | Premalatha | ADMK | DMDK