சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெற்றோர்களின் தொடர் போராட்டத்தை அடுத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.கொம்புகாரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிர மூர்த்தி, மாணவர்களிடம் சாதி ரீதியாக பாகுபாடு பார்த்ததாக புகார் எழுந்தது.இதை கண்டித்து பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதை அடுத்து தலைமை ஆசிரியரை முறையூர் அரசு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.