சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, புதிதாக திறக்கப்பட்ட கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தும்பைப்பட்டி கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 6 தொழிலாளர்களை பலி கொண்ட மல்லாக்கோட்டை கல்குவாரி அருகே, மீண்டும் புதிய கல்குவாரி திறக்கப்பட்டிருப்பதால் அச்சமடைந்துள்ள கிராமத்தினர், கல்குவாரிக்கான அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.