கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் நிறைவடைந்த பூங்கா பணிக்கான ஒப்பந்த பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். அரசு கட்டுமான பணி ஒப்பந்ததாரரான ஐயப்பன், திங்கள்நகர் பேரூராட்சிக்கு சொந்தமான நேசமணி நினைவு பூங்காவை 33-லட்சம் ரூபாய் செலவில் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணிக்கான ஒப்பந்தத்தை பெற்று பணி செய்துள்ளார். கடந்த 6-மாதங்களுக்கு முன் இந்த பணிகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பணி ஒப்பந்தத்திற்கான பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பாக புகார் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : கல்லூரி பேராசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை..!