,திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நிரந்தர துப்புரவு பணியாளர் தாக்கியதை கண்டித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.மன்னார்குடி நகராட்சி அலுவலக நிரந்தர துப்புரவு பணியாளர் ராஜேஷ்கண்ணன் என்பவர் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை பல்வேறு வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி ஆணையரிடம் புகார் அளித்ததால் ராஜேஷ்கண்ணனை அழைத்து விசாரித்தார்.இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்களிடம் ராஜேஷ்கண்ணன் வாக்குவாதம் செய்து தாக்கியதாக தெரிகிறது.