கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கருணை கொலை செய்திடுங்கள் என, என்.எல்.சி. தொழிலாளி தமது இரு குழந்தைகளோடு என்.எல்.சி தலைமையக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2-வது சுரங்கத்தில் சொசைட்டி தொழிலாளராக பணிபுரிந்து வரும் செந்தில்குமார், தனக்கு வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் மாத சம்பளத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியவில்லை என வேதனைத் தெரிவித்தார்.