தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்களை அகற்றக் கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்கள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி எறிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார், ஏற மறுத்தவர்களை குண்டுக்கட்டாக கைது செய்ததோடு, இரு இளைஞர்களை மட்டும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.இதையும் படியுங்கள் : ஆழ்கடலில் அதிமுக கொடியை பறக்கவிட்ட நாகை கவுன்சிலர்