மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் 38 பள்ளிகளை சேர்ந்த 178 மாணாக்கர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக இந்த போட்டியினை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.