சிவகங்கை மாவட்டம் அய்யம்பட்டி தர்ம முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில், மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு கொண்டு காளைகளை அடக்கினர்.இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் இருந்து 17 காளைகளும், 153 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில், மாடு முட்டியதில் 8 பேர் காயமடைந்தனர்.