தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்த அனுமந்தன்பட்டியில், போடப்பட்ட தார்சாலை தரமற்று மூன்று நாட்களில் அடியோடு பெயர்ந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தார் சாலை அமைக்கும் பணி முறைகேடாக நடைபெறுவதாகவும், முன்பிருந்த சாலையை தோண்டாமல் அப்படியே தார் ஊற்றி சாலை அமைப்பதால் தரமற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை கூட மூடாமல் சாலை அமைப்பதாக குற்றம் சாட்டிய மக்கள் தரமான சாலை அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.