கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர், கோவில் பாளையம் தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரங்களில் தாபா ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஹோட்டல்களில் சட்டவிரோதமாக 24மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து,கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் மற்றும் கரும்மத்தம்பட்டி டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.இந்த சோதனையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்ததையடுத்து மொத்தமாக பத்து தாபாக்களை வருவாய்த்துறையினர் போலீசார் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர்.