திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற பக்தர்கள் போதிய பேருந்துகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகினர். மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக மத்திய பேருந்து நிலையம் சென்ற போது அங்கு போதிய பேருந்துகள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அரசு போக்குவரத்து துறை முறையாக முன்னேற்பாடுகளை செய்யாததே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டிய மக்கள் பௌர்ணமி தினங்களை போல மற்ற விசேஷ நாட்களிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.