ஐப்பசி மாத பௌர்ணமியில், கிரிவலம் முடித்து விட்டு, அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க, ஆறு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயிலை ஒட்டிய 14 கிமீ மலையைச் சுற்றி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் என்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஐப்பசி மாத பௌர்ணமியில் இரவு முழுவதும் கிரிவலம் வந்தனர். கிரிவலத்தை முடித்த பக்தர்கள், அன்னாபிஷேகம் என்பதால், அருணாச்சலேஸ்வரர் கோயிலில், சாமி தரிசனம் செய்ய இரவு முதலே நீண்ட வரிசையில் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. போலீசார் அதிகாலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தி, பெரிய அளவில் தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக, பக்தர்களை பிரித்து அனுப்பி வைத்தனர். இதையும் பாருங்கள் - திருவண்ணாமலையில் குவிந்த கூட்டம், கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் |ThiruvannamalaiGirivalam