அய்யனார் குளம் பத்ரகாளி அம்மன் கோயில் கொடைவிழாவில், ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, பூக்குழி இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே விக்ரமசிங்கபுரம் அய்யனார் குளத்தில் பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா விமர்சையாக நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கிய கொடை விழாவில் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற்றது. அய்யா ஶ்ரீமன் நாராயணசாமி நாக வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து, பத்ரகாளி அம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த நெருப்பு குண்டத்திற்கு வந்தடைந்ததும் பக்தியுடன் காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர்.