திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் இரவு தரிசனம் முடியும் நேரத்தில் சில பக்தர்கள் கோயில் தடுப்புகள் மீது ஏறி குதித்து உள்ளே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.