திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, பழனி தைப்பூசத்திற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் கால் வலிக்கு மருந்து தடவி பொதுமக்கள் சேவை செய்தனர். பக்தர்களின் களைப்பை போக்கும் வகையில் அவர்களுக்கு இளநீர், பழங்கள் வழங்கி வரும் பொதுமக்கள், இளைப்பாறும் பக்தர்களுக்கு இசை சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடத்தினர்.