கோயில் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து வீதி உலா வந்த பக்தர்களிடம் ஏராளமான பொது மக்கள் ஆசி பெற்றுச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த செப்.9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. இன்று பக்தர்கள் விரதம் இருந்து, கைகளில் அக்கினிசட்டி ஏந்தி வீதி உலா வந்தனர். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வீதி உலா வந்த போது ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்.