தமிழக முழுவதும் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சுற்றுலா தளங்கள் மற்றும் கோவில்களில் பொதுமக்கள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும் எந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆரணி ஆற்றங்கரையோரம் சுயமாக எழுந்து அருளிய அம்மன் ஆடி மாதம் விழா கோலம் கொண்டிருக்கும். இருப்பினும் இன்று காணும் பொங்கல் என்பதால் பல்வேறு ஊரிலிருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலை முதலே கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து தொடங்கிய நிலையில் தற்போது சுமார் ஒரு மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சிறப்பு அலங்காரத்தில் பவானி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.இதையும் படியுங்கள் : ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு