உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் சிரமத்துக்கு ஆளாகினர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல போதிய சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்து ஏறி சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றனர்.