விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள சதுரகிரி கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை திருவிழா தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரத்தொடங்கிய பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதி மற்றும் அடிவாரம் பகுதிகளில் உள்ள தோப்புகளில் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் காலை 6 மணி முதல் 12மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பிரதோஷத்தை ஒட்டி பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.