தொடர் விடுமுறையால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள், கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.