தொடர் விடுமுறையை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். ஆவணித் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதிகாலையிலேயே கோயிலுக்கு வரத் தொடங்கிய பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுமார் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.