வார விடுமுறை தினத்தை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை நான்கு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும் அபிஷேகமும் நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி பொது தரிசனத்தில் 5 மணி நேரம் காத்திருந்து வழிபாடு செய்தனர். மேலும் ஆனி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் ஏராளமான திருமணங்கள் கோயிலில் நடைபெற்றன.