வாரவிடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.காலை முதலே திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி நாழி கிணற்றில் குளித்துவிட்டு முருகப் பெருமானை அரோகரா கோஷத்துடன் மனமுருகி தரிசித்தனர். இதனால் கடற்கரையில் திரும்பும் திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.