அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சுமார் 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். தொடர்ந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். வேல் குத்தியும், பன்னீர், காவடி, புஷ்ப காவடி, பால் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர். வேல் குத்தி காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நேர்வழியில் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதையும் பாருங்கள் - விஜய்க்கு கை கொடுத்த ராகுல்காந்தி