சென்னையில் இருந்து மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் படையெடுத்ததால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனி அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்வதற்காக, சென்னையில் இருந்து பேருந்து-கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் புறப்பட்டனர். இதனால், பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.இதையும் படியுங்கள் : மத்திய கூட்டுறவு வங்கியில் நகை, வைப்பு தொகை மோசடி என புகார்... வங்கி அலுவலக உதவியாளர் தலைமறைவு என தகவல்