தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவில், பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே கலரில் சேலை அணிந்து, முளைப்பாரியை சுற்றி கும்மியடித்து பாட்டு பாடியது ரம்மியமாக காட்சியளித்தது.