விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகமும், வனத்துறையும் 4 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது. புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, வரும் 30-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செல்லலாம் எனவும், காலை ஆறரை மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், மலைப் பாதைகளில் உள்ள நீரோடைகளில் பக்தர்கள் இறங்கக் கூடாது, இரவு நேரத்தில் கோவிலில் தங்கக் கூடாது, 10 வயதுக்குள்ளும், 60 வயதுக்கு மேலும் உள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இது தவிர, மழை பெய்தாலோ, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலோ பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.