காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்த அகர சேத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக வந்து தீக்குழியில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.