தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தார். 100 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட் எடுத்து வரிசையில் காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.