ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், திருப்பதி கோவிலுக்கு செல்ல இருந்த பக்தர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் காலதாமதமாக சிகிச்சை அளித்ததே உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரக்கோணம் ஏ.பி.எம் சர்ச் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், பெருமாள் கோவில் விழாவில் மைக்கை சரி செய்த போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரை காப்பாற்ற இயலவில்லை.